×

சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வம் திரளான பக்தர்கள் தரிசனம் ஒடுகத்தூர் அருகே ஆண்டுக்கு ஒரு முறை

ஒடுகத்தூர், ஜூலை 29: ஒடுகத்தூர் அருகே சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வை திரளான பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பாக்கம் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள சிவனை அவ்வப்போது வந்து ஒருநாகம் அங்குள்ள நந்தி மீது அமர்ந்து வழிபட்டு செல்லும் சிறப்பும் வாய்ந்தது இந்தகோயில். அதேபோல், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அரிய நிகழ்வான மூலவர் மீது விழும் சூரிய ஒளியை காண இங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் அந்த அரிய நிகழ்வு நேற்று காலை நிகழ்ந்தது. ஆடி 2ம்வெள்ளியை முன்னிட்டு நேற்றுகாலை சுவாமிக்குசிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அப்போது, கோயிலில் உள்ள மூலவர் மீது காலை 7 மணிக்கு சூரியஒளி விழும் அந்த அற்புத நிகழ்வு நடந்தது. இதனைகாண சுற்றுவட்டாரபகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அபூர்வம் திரளான பக்தர்கள் தரிசனம் ஒடுகத்தூர் அருகே ஆண்டுக்கு ஒரு முறை appeared first on Dinakaran.

Tags : Shivlingam ,Odugathur ,Shiva Lingam ,
× RELATED ஒடுகத்தூர் அருகே வனப்பகுதியில்...